உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மீண்டும் துவங்கியது வெயில் உக்கிரம்

மீண்டும் துவங்கியது வெயில் உக்கிரம்

தர்மபுரி: தர்மபுரியில் கடந்த மூன்று நாட்களாக இருந்த இருண்ட வானிலை மாறி நேற்று வழக்கம் போல் வெயில் உக்கிரம் வாட்ட துவங்கியது.தர்மபுரி மாவட்டத்தில் செப்டம்பர் கடைசி வாரத்தில் இருந்து கோடை காலத்தை மிஞ்சும் அளவுக்கு வெயில் உக்கிரம் அதிகம் இருந்தது. இதனால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக திடீரென இருண்ட வானிலையுடன் வெயில் இன்றி மழைக்கான அறிகுறியுடன் சீதோஷண நிலை மாற்றம் ஏற்பட்டது.கடந்த மூன்று நாட்களாக இரவில் மாவட்டத்தில் பல பகுதியிலும் வெயில் அடித்து வந்தது. நேற்று முன்தினம் இருண்ட வானிலையுடன் மழைக்கான அறிகுறிகள் இருந்த போதும் மழை பெய்யாமல் ஏமாற்றி வந்தது. நேற்று காலையில் குளிர் காற்று வீசியது.பகல் 10 மணிக்கு மேல் வழக்கம் போல் வெயில் உக்கிரம் வாட்டி எடுக்க துவங்கியது. பகல் 12 மணிக்கு வெயில் உக்கிரம் அதிகம் இருந்தது. சாலைகளில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு வெயில் வாட்டியது. திடீரென குளிர் காற்று, மழை, வெயில் என மாறி, மாறி வருவதால், பலருக்கு உடல் நலப்பாதிப்பு ஏற்பட்டது. இதனால், மருத்துவமனைகளில் வழக்கத்தை விட நோயாளிகளின் வருகை அதிகம் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ