குடிநீர் குழாய் திருட்டு
குடிநீர் குழாய் திருட்டு கடத்துார்:--கடத்துார் ஒன்றியம், தாளநத்தம் ஊராட்சியில், தாளநத்தம் - --நொச்சிக்குட்டை செல்லும் சாலையில், கல்லாற்றின் குறுக்கே ஒகேனக்கல் குடிநீர் வழங்க குழாய் அமைக்கப்பட்டிருந்தது. இதனை, நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதனால் நொச்சி க்குட்டை, கோவில் வனம் பகுதி மக்கள் குடிநீர் இன்றி அவதிப்படுகின்றனர். கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.