உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வன உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்

வன உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்

அரூர்: உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோட்டப்பட்டியில், தமிழ் தேசிய மலைநாடு மக்கள் கட்சி சார்பில், மலைவாழ் மக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. தமிழ் தேசிய மலைநாடு மக்கள் கட்சி மாநில பொருளாளர் குப்பு-சாமி தலைமை வகித்தார். நிறுவன தலைவர் ராமசாமி பேசினார். இதில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்தில் வன உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.வன நிலத்தை பயன்படுத்திக் கொள்ள உரிமைப்பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியு-றுத்தப்பட்டன. நிர்வாகிகள் ராமாயி, வேடியப்பன், கணபதி உள்-பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை