உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மங்களூரு - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் மொரப்பூரில் நின்று செல்ல கோரிக்கை

மங்களூரு - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் மொரப்பூரில் நின்று செல்ல கோரிக்கை

மொரப்பூர்: பொம்மிடி, மொரப்பூர் ரயில் பயணிகள் சங்க தலைவர் பொன்னுசாமி, முனிரத்தினம், பொதுச்செயலாளர் ரகுநாதன், பாபு ஆகியோர், மத்திய இணையமைச்சர் முருகனிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில் கடந்த, 1861ல் ரயில்வே ஸ்டேஷன் துவங்கப்பட்டது. 163 ஆண்டுகள் பழமையான, மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷன் தென்னக ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வருகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், வணிகர்கள் என தினமும், 3,000க்கும் மேற்பட்டோர் இந்த ரயில்வே ஸ்டேஷன் வழியாக, பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். சேலம் - ஜோலார்பேட்டை வழித்தடத்தில் அமைந்துள்ள மொரப்பூர் மற்றும் பொம்மிடி ரயில்வே ஸ்டேஷனில், ஒரு சில ரயில்கள் மட்டுமே நின்று செல்கிறது. எனவே, பயணிகளின் நலன் கருதி மங்களூரு - சென்னை, திருவனந்தபுரம் - சென்னை, சந்திரகாரா - மதுரை - சந்திரகாரா, திப்ருகர் - கன்னியாகுமரி விவேக் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் மொரப்பூரிலும் அதே போல், சென்னை - கோவை, திருவனந்தபுரம் -சென்னை ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள், பொம்மிடியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ