மேலும் செய்திகள்
தர்மபுரியில் சாரல் மழை
03-Nov-2024
சாரல் மழை: வாகன ஓட்டுனர்கள் அவதி
23-Oct-2024
அரூரில் சாரல்மழைஅரூர், நவ. 15-தர்மபுரி மாவட்டம், அரூர், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்றும் அதிகாலை முதல், சாரல்மழை பெய்தது. இதனால் மழையில் நனைந்தபடி பள்ளி, கல்லுாரிக்கு மாணவ, மாணவியர் சென்றனர். அதே போல், அரசு அலுவலகங்களுக்கு செல்பவர்கள் மற்றும் கூலி வேலைக்கு செல்பவர்கள் காலை நேரத்தில் பெய்த மழையால் சிரமத்திற்குள்ளாகினர்.அரூர் கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் ரெயின்கோட் அணிந்த படி, சாரல் மழையில் நனைந்தபடியே சென்றனர். சாலையோர கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் ஆடு, மாடுகளை மேய்ச்சல் நிலங்களில் விட முடியாமல் விவசாயிகள் தவிப்புக்கு உள்ளாகினர். சாரல்மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
03-Nov-2024
23-Oct-2024