| ADDED : ஜூலை 13, 2011 11:54 PM
அரூர்: அரூரில் வீதியில் கிடந்த 200 கிலோ ரேஷன் அரிசியை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர். அரூர் தாசில்தார் மணிமேகலைக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து தாசில்தார் மணிமேகலை, மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் மாறன், ஆர்.ஐ., சேட்டு, வட்ட வழங்கல் அலுவலர் பழனியம்மாள், தனி ஆர்.ஐ., சேரன் ஆகியோர் அரூர் கச்சேரிமேட்டிலுள்ள அண்ணாநகர் பகுதிக்கு சென்றனர். அங்கு சாலையோரம் கேட்பாரற்று கிடந்த ஆறு மூட்டைகளில் 200 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரிந்து பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசி அரூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்களில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக அரூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.