உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குடிநீர் குழாய் அமைக்க உண்ணாவிரதம்

குடிநீர் குழாய் அமைக்க உண்ணாவிரதம்

பாப்பிரெட்டிப்பட்டி, : கடத்துார் ஒன்றியம் ஓபிளி நாயக்கனஹள்ளி ஊராட்சிக்கு உள்-ளிட்ட அஸ்திகிரியூரில், 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்தவர் காசி, 65. இவர், தன் வீட்டிற்கு குடிநீர் குழாய் அமைக்க வேண்டி நேற்று காலை, 11:00 மணிய-ளவில், கடத்துார் பி.டி.ஓ., அலுவலகம் முன், கையில் குடிநீர் குழாயுடன் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து அவர் கூறுகையில், ''நான், தி.மு.க.,வை சேர்ந்-தவன். கடந்த, 2011 முதல் என் வீட்டிற்கு குடிநீர் குழாய் அமைக்க ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் அமைக்க-வில்லை. கலெக்டர், பி.டி.ஓ., உள்ளிட்ட அனைவருக்கும் கோரிக்கை மனு அளித்தும், நடவடிக்கை இல்லை,'' என்றார். இது குறித்து, ஊராட்சி மன்ற தலைவரான, தி.மு.க.,வை சேர்ந்த வடிவேல் கூறியதாவது: தினமும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. 2 வீட்டுக்கு, ஒரு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது இதில், அவர் பிடிக்காமல், தன் வீட்டுக்கு உள்ளேயே குடிநீர் குழாய் அமைக்க கேட்கிறார். ஜல்சக்தி அபியான் திட்டத்தில் இன்னும் ஒரு வாரத்தில், கிராமம் முழுவதும் தனித்தனியாக குடிநீர் குழாய் அமைக்கும் பணி தொடங்கவுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை