உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / காணியம்மன் கோவில் தேர் திருவிழா துவக்கம்

காணியம்மன் கோவில் தேர் திருவிழா துவக்கம்

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டியிலுள்ள காணியம்மன் கோவிலில் வரும், 21ல் தேர் திருவிழா நடக்கிறது. இதையொட்டி கடந்த, 13ல் பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. நேற்று மாலை இருளப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் குமார், புதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ் தலைமையில், இருளப்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி, பள்ளிப்பட்டி, பாப்பம்பாடி ஆகிய அனைத்து சமுதாய ஊர் கவுண்டர்கள், பொதுமக்கள் முன்னிலையில் கோவிலில் கொடியேற்றம் நடந்தது. வரும், 19ல் திருக்கல்யாணம் ஏணி பந்தம், வாணவேடிக்கை, பல்லக்கு உற்சவம், மகமேரி உற்சவம், 20ல் மாவிளக்கு எடுத்தல், 21ல் திருத்தேர் திருவிழா நடக்கிறது. 23ல் காணியம்மன் சாமி, தயால்கல்மலை சுற்றி முனி பிடிக்கும் திருவிழா, 24ல் மஞ்சள் நீராட்டு விழா நடக்க உள்ளது. விழாவை, 6 ஊராட்சிகளை சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ