உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மோசமான கிராம தார்ச்சாலை பொதுமக்கள் கடும் அவதி

மோசமான கிராம தார்ச்சாலை பொதுமக்கள் கடும் அவதி

நல்லம்பள்ளி: தர்மபுரி, நல்லம்பள்ளி அருகே ஜல்லி கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ள தார்ச்சாலையால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த குரும்பட்டியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் கூலி வேலைக்கும், விவசாயிகள் சாகுபடி செய்யும் காய்கறிகளை நல்லம்பள்ளி வார சந்தைக்கும் செல்கின்றனர். இந்த வழியில் பஸ், ஆட்டோ போக்குவரத்து இல்லாததால், இவர்கள் நடந்தும் டூவீலர்களிலும் சென்று வருகின்றனர். இந்நிலையில், பல ஆண்-டுகளுக்கு முன், சேசம்பட்டி கூட்ரோடு பிரிவு சாலையில் இருந்து, அருகே உள்ள குரும்பட்டி வரை, 1.5 கி.மீ., துாரத்துக்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டது. தற்போது பல இடங்களில் ஜல்-லிகற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக உள்ளது. இதுகுறித்து, அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க-வில்லை. எனவே, இப்பகுதி மக்களின் நலன்கருதி, சேதமான நிலையில் உள்ள தார் சாலையை சீரமைக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி