| ADDED : ஏப் 23, 2024 04:07 AM
தர்மபுரி: பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், கூலித்தொழிலாளிக்கு, 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, தர்மபுரி நீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது.தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே மானியதஅள்ளி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மாரியப்பன், 35; இவர், பிளஸ் 2 மாணவியை கடந்த, 2017 ல் பாலியல் பலாத்காரம் செய்ததோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி புகார் படி, தொப்பூர் போலீசார், மாரியப்பனை போக்சோவில் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு, தர்மபுரி போக்சோ நீதிமன்ற த்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி சையத் பர்க்கத்துல்லா, கூலித்தொழிலாளி மாரியப்பனுக்கு, 15 ஆண்டு சிறைதண்டனை மற்றும் 35,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.