உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 2 டிப்பர் லாரிகள் பறிமுதல்

2 டிப்பர் லாரிகள் பறிமுதல்

2 டிப்பர் லாரிகள் பறிமுதல்காரிமங்கலம்: தர்மபுரி மாவட்ட சுரங்கத்துறை உதவி புவியியலாளர் புவனமாணிக்கம் நேற்று முன்தினம், காரிமங்கலம் - பாலக்கோடு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, அவ்வழியாக வந்த மினி டிப்பர் லாரியை சோதனை செய்தபோது, அதில், 2 யூனிட் மண் கடத்தியது தெரிந்தது. அவர் புகார் படி, காரிமங்கலம் போலீசார் டிப்பர் லாரியை ஓட்டி வந்த, காரிமங்கலம் இளவரசன், 32 என்பவரை கைது செய்து, மினி டிப்பரை பறிமுதல் செய்தனர்.* அரூர் அரசு மருத்துவமனை அருகில், நேற்று முன்தினம் காலை, 10:20 மணிக்கு, அரூர் ஆர்.ஐ., சத்தியபிரியா, வி.ஏ.ஓ., ஜெயபிரகாஷ் மற்றும் வருவாய்த்துறையினர் அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தினர். அப்போது லாரியை நிறுத்தி விட்டு, டிரைவர் தப்பினார். லாரியை சோதனை செய்ததில், 4 யூனிட் நொரம்பு மண் கடத்தியது தெரிந்தது. வாகனத்தை கைப்பற்றி அரூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை