உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரூ.4.28 கோடி மதிப்பு திட்டப்பணிக்கு ஒப்புதல்

ரூ.4.28 கோடி மதிப்பு திட்டப்பணிக்கு ஒப்புதல்

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம், தர்மபுரி ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடந்தது. அதன் தலைவர் யசோதா தலைமை வகித்தார். துணைத்தலைவர் சரஸ்வதி முன்-னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலாளர் கருணாநிதி கூட்ட நடவடிக்கைகள் குறித்து பேசினார். இதில், 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, 2024- - 25 ம் ஆண்டுக்கான, 15வது மத்திய நிதி குழு மானிய திட்டத்தில், 4.28 கோடி ரூபாய் மதிப்பில், தர்மபுரி மாவட்-டத்தில் திட்டப்பணிகள் மேற்கொள்ள, மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், 30 சதவீதம் குடிநீர் திட்ட பணிகளுக்கும், 30 சதவீதம் கழிவு நீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகளுக்கும், 40 சதவீதம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களின் பரிந்துரைப்படி, மற்ற திட்ட பணிகளுக்கும் ஒதுக்கீடு செய்து, பணிகளை நிறைவேற்ற, நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி