உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கலெக்டர் அலுவலக வளாகத்தில் தண்ணீரின்றி கருகிய மரங்கள்

கலெக்டர் அலுவலக வளாகத்தில் தண்ணீரின்றி கருகிய மரங்கள்

தர்மபுரி: கடும் வெயில் மற்றும் நீரின்றி, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள, மரங்கள் நீரின்றி கருகி வருகின்றன. தர்மபுரி நகர பகுதி அருகே, மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்.பி., அலுவலகம் உள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில், பல வகையான பூச்செடிகள் மற்றும் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் தொடர்ந்து கொளுத்தி வரும் வெயில் மற்றும் கடும் வறட்சியால், கலெக்டர் அலுவலக பூங்காவில் உள்ள மரங்கள் நீரின்றி கருகி வருகின்றன. கடந்த காலங்களில் வறட்சி சமயத்தில், தர்மபுரி நகராட்சி சார்பில், கலெக்டர் அலுவலகத்திலுள்ள அலங்கார செடிகள் மற்றும் மரங்களுக்கு தொடர்ந்து தண்ணீர் ஊற்றி பாதுகாக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது, அதுபோல் நடவடிக்கை எடுக்கப்படாததால், செடிகள் அனைத்தும், தண்ணீர் இல்லாமல் கருகத் தொடங்கி உள்ளன. இதில், மீதமுள்ள மரங்கள் காய்ந்து விடாமல் இருக்க, தண்ணீர் ஊற்றி, அவற்றை காப்பாற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்