பயிர் காப்பீடு தொகை வழங்க கரும்பு விவசாயிகள் கோரிக்கை
அரூர்: தர்மபுரி மாவட்டத்தில், அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், நடப்பாண்டு, 3,000க்கும் மேற்பட்ட ஏக்-கரில் விவசாயிகள் கரும்பு நடவு செய்துள்ளனர். கடந்தாண்டு போதிய மழை பெய்யாததால் ஏரி, குளம், கிணறு உள்ளிட்ட நீர்-நிலைகள் வறண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டு கோடை வெப்பம் வழக்கத்தை விட அதிகமாக இருந்ததால் கரும்புகள் காய்ந்து வருகிறது. எனவே, பயிர் காப்-பீடு தொகையை அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்-கப்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: கரும்பு சாகுபடி செய்துள்ள பெரும்பாலான விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். வறட்சியால் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிர்கள் காய்ந்து விட்டன. ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடி செய்வ-தற்கு, 40,000 ரூபாய் செலவாகிறது. வறட்சியால் பயிர்கள் பாதிக்-கப்படும் போது, பயிர் காப்பீடு திட்டத்தில் ஒரு ஏக்கருக்கு, 45,000 ரூபாய் அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்படுவது வழக்கம். ஆனால், 10 ஆண்டுகளாக வெள்ளப் பெருக்கு, வறட்-சியால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான கரும்பு விவசாயிகளுக்கு இதுவரை காப்பீடு தொகை வழங்கவில்லை. எனவே, வறட்-சியால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் குறித்து வேளாண் துறை, புள்ளியியல் மற்றும் காப்பீட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து முறையாக கணக்கெடுப்பு நடத்தி, காப்பீடு தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்-வாறு கூறினர்.