மேலும் செய்திகள்
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
08-Oct-2025
தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
08-Oct-2025
சுகாதாரமற்று இறைச்சி 7 கடைகளுக்கு அபராதம்
08-Oct-2025
தர்மபுரி வைர விழா பேரணி
08-Oct-2025
தர்மபுரி,தர்மபுரி மாவட்டத்திலுள்ள குழந்தைகளுக்கு, 'வைட்டமின் ஏ' திரவம் வழங்கும் முகாம் நடக்க உள்ளது என, கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில், 'வைட்டமின் ஏ' சத்து குறைபாட்டு நோய்களை தடுக்கும் திட்டத்தில், 6 மாதம் முதல், 5 வயதுடைய குழந்தைகளுக்கு, 'வைட்டமின் ஏ' திரவம் வழங்கப்பட உள்ளது. இச்சத்து குறைபாட்டால், குழந்தைகளின் உடல், மன வளர்ச்சி மற்றும் புத்திக்கூர்மை குறைய வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கு, இந்த 'வைட்டமின் ஏ' கொடுப்பதால் கண் குருடு ஏற்படாமல் தடுக்கும். இதனால், குழந்தைகளுக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருக்கும். இத்திரவம், நாளை முதல் ஜூலை மாத இறுதி வரை, அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும். 6 முதல், 11 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு, 1 மி.லி., அளவும், 12 மாதம் முதல், 5 வயதுடைய குழந்தைகளுக்கு, 2 மி.லி., அளவும் வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி குழந்தைகளுக்கு, 'வைட்டமின் ஏ' திரவம் கொடுத்து பயன்பெறலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
08-Oct-2025
08-Oct-2025
08-Oct-2025
08-Oct-2025