தர்மபுரி: தர்மபுரி அரசு கலைக்கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை முகாம் நடந்து வருகிறது என, கல்லுாரி முதல்வர் கண்ணன் தெவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:தர்மபுரி அரசு கலைக்கல்லுாரியில் வரும், 29 காலை, 10:00 மணிக்கு மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் படை வீரர்களின் மாணவர்கள். அந்தமான், நிக்கோபர் பகுதியை சேர்ந்த மாணர்கள், பாதுகாப்பு படை வீரரின் குழந்தைகள், விதவை, விளையாட்டு வீரரின் குழந்தைகள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பபடிவம், மாற்று சான்றிதழ், ஆதார் அட்டை ஜெராக்ஸ், வங்கி பாஸ்புத்தகம் உள்ளிட்டவைகளை நேரில் சமர்பிக்க வேண்டும். கலை மற்றும் வணிகவியில் பாடப்பிரிவுகளுக்கு, 2,980 ரூபாய், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு, 3,000 ரூபாய், மற்ற பாடப்பிரிவுகளுக்கு, 2,100 ரூபாய் சேர்க்கை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு, WWW.gacdpi.ac.in.inஎன்ற இணைய தளத்தில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.