உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பைக்கில் பறக்கும் மாணவர்கள்; அச்சத்தில் வாகன ஓட்டிகள்

பைக்கில் பறக்கும் மாணவர்கள்; அச்சத்தில் வாகன ஓட்டிகள்

அரூர்: அரூரில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அதிகளவில் இருசக்கர வாகனங்களை எடுத்து செல்கின்றனர். மாணவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டக்கூடாது என்று போக்குவரத்து போலீசார் பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் கூறுகின்றனர். ஆனாலும் அதை பெரும்பாலான மாணவர்களும், பெற்றோரும் மதிப்பதில்லை. மாணவர்கள், 18 வயது நிரம்பாத சிறுவர்கள் என்பதால், ஓட்டுனர் உரிமம் பெறக்கூட வயது தகுதி பெறவில்லை.மாணவர்கள் மொபட், ஸ்கூட்டர், பைக் போன்ற இருசக்கர வாகனங்களில் பஸ் ஸ்டாண்ட், கச்சேரிமேடு, திரு.வி.க., நகர், கடைவீதி, மஜீத்தெரு, போலீஸ் ஸ்டேஷன், 4 ரோடு உள்ளிட்ட இடங்களில் வருவதை தினந்தோறும் பார்க்க முடிகிறது. ஓட்டுனர் உரிமம் இல்லாத அவர்கள், ஹெல்மெட் அணியாமல் பைக்கில் ஒன்றிற்கும் மேற்பட்ட நண்பர்களை, பின்னால் அமர வைத்து மிக வேகமாக வருகின்றனர். இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதுடன், எதிரில் வரும் வாகன ஓட்டிகள் பீதியுடன் செல்லும் நிலையுள்ளது. இதை போலீசாரும் கண்டும், காணாமல் இருந்து வருகின்றனர்.எனவே, அரூரில் இருசக்கர வாகனம் ஓட்டிச் செல்லும் சிறுவர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ