மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை
7 hour(s) ago
கரும்பில் வேர்புழு தாக்குதல்: இழப்பீடு வழங்க கோரிக்கை
7 hour(s) ago
தவற விட்ட ரூ.15,000 உரியவரிடம் ஒப்படைப்பு
7 hour(s) ago
பாலக்கோடு:தர்மபுரி மாவட்டத்தில் இரண்டு மாதமாக, 100 முதல், 108 டிகிரி வரை கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. நேற்று முன்தினம் இரவு பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளான வெள்ளிசந்தை, வெலாம்பட்டி, ஜக்கசமுத்திரம், அண்ணாமலைஹள்ளி, குண்டாங்காடு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இடி, மின்னல், காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து, இதமான சூழல் நிலவியது.பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில், 10,000 ஏக்கருக்கு மேல் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தாண்டு நிலவிய கடுமையான வெப்பத்தால், மா மரங்களில் இருந்த பூக்கள் கருகியது. சில மரங்களில் மட்டும் காய்கள் காய்த்திருந்தன. இரவு பெய்த ஆலங்கட்டி மழை, சூறை காற்றால் மா மரங்களில் இருந்த பிஞ்சுகள் உதிர்ந்தன. இதன் காரணமாக, மா சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago