உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தொடர் மழை எதிரொலி பட்டு வரத்து சரிவு

தொடர் மழை எதிரொலி பட்டு வரத்து சரிவு

தர்மபுரி: தர்மபுரியில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால், பட்டு வரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.தர்மபுரியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், அரசு பட்டுக்-கூடு அங்காடியில் நடக்கும் ஏலத்துக்கு வரும் விவசாயிளின் வருகை குறைந்து காணப்பட்டது. தினமும் நடக்கும் ஏலத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பங்கேற்-கின்றனர். நேற்று விவசாயிகளின் வருகை குறைந்து காணப்பட்-டது.கடந்த வாரத்தில், 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏலத்தில் பங்-கேற்றனர். பின் விவசாயிகள் வருகை குறைந்து, நேற்று முன்-தினம், 45 பேரும் நேற்று, 30 பேரும் வந்திருந்தனர். இவர்கள், 56 குவியல்களாக, 2,038 கிலோ வெண்பட்டுக்கூடுகளை கொண்டு வந்தனர். கிலோ குறைந்தபட்சமாக, 264 முதல் அதிக-பட்சமாக, 521 ரூபாய் வரை ஏலம் போனது. இவற்றின் மொத்த மதிப்பு, எட்டு லட்சத்து, 6,776 ரூபாய். நேற்று ஒருநாள் நடந்த ஏலத்தால் அரசுக்கு, 12 ஆயிரத்து, 100 ரூபாய் வருவாய் கிடைத்-துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை