உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / 4 வழிச்சாலை பணிகள் விரைந்து முடிக்க உத்தரவு

4 வழிச்சாலை பணிகள் விரைந்து முடிக்க உத்தரவு

அரூர்: முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தில், அரூர் வழியாக, தர்மபுரி - தானிப்பாடி இடையே, 410 கோடி ரூபாய் மதிப்பில், 4 வழிச்சாலை அமைக்கும் பணி, கடந்த, 2022 ஜூன்., 19ல் அமைச்சர்கள் வேலு, பன்னீர்செல்வம் ஆகியோர் துவக்கி வைத்தனர். தீர்த்தமலையில் இருந்து தானிப்பாடி வரை, வழிச்சாலை அமைக்கும் பணியை, சேலம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 4 வழிச்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். அவருடன் தர்மபுரி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் நாகராஜி, உதவிக் கோட்ட பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் உடனிருந்தனர்.திருவண்ணாமலை - அரூர் வழியாக, தானிப்பாடி மாநில நெடுஞ்சாலையில் இ.பி., தண்டா முதல் தீர்த்தமலை வரை, 4 வழி நெடுஞ்சாலை, 59 கோடி ரூபாய் மதிப்பில், சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது. இதில், தார்ச்சாலை பணிகள் தொடங்கவுள்ள நிலையில், அதன் தன்மை குறித்து, சேலம் கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை