உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஏரியிலுள்ள கருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

ஏரியிலுள்ள கருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், ஏரிகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், ஆட்டுக்காரம்பட்டியில், 7 ஏக்கரில் ஏரி அமைந்துள்ளது. இதில், ஏராளமான கருவேல மரங்கள் உள்ளன. இதை அகற்றக்கோரி, இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பஞ்., மற்றும் மாவட்ட நிர்வாகம் இதை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், இந்த ஏரியின் பாசன கால்வாய் நீரால் பயன்பெரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களின் நலன் கருதி, இந்த ஏரியிலுள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த ஏரிக்கு வரும் மழைநீர் வாய்க்கால்களை துார்வார நடடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ