உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சமுதாய கழிப்பிடம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சமுதாய கழிப்பிடம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பாப்பாரப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ஏகாலித்தெருவில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் கடந்த, 8 ஆண்டுகளுக்கு முன், பேரூராட்சி நிர்-வாகம் சார்பில் சமுதாய கழிப்பிடம் கட்டப்பட்டது. இதை, அப்-பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கு முன், அந்த கழிப்பறையின் மின் மோட்டாரில் பழுது ஏற்பட்டது. இதனால், அதில் தண்ணீர் வராததால், பொதுமக்கள் இதை பயன்-படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இப்பகுதி மக்கள் இயற்கை உபாதை கழிக்க, திறந்தவெளியை பயன்படுத்தி வருகின்றனர். இதை சீரமைக்கக்கோரி, பேரூராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, பாப்பாரப்-பட்டி ஏகாலித்தெரு மக்களின் நலன்கருதி, இந்த சமுதாய கழிப்பிடத்தை சீரமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ