உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / லாரி கவிழ்ந்து தொழிலாளி பலி

லாரி கவிழ்ந்து தொழிலாளி பலி

பென்னாகரம்:திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிகால்லை சேர்ந்தவர் பாண்டுரங்கன், 55; இவர், மினி லாரியில் வைக்கோல் ஏற்றி பல இடங்களுக்கு சென்று விற்று வந்தார். நேற்று முன்தினம், பென்னாகரத்திலிருந்து பவளந்துாருக்கு வைக்கோல் ஏற்றி சென்றார். அவருக்கு உதவியாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஓலப்பட்டியை சேர்ந்த பரமசிவம், 56, என்ற தொழிலாளி லாரி பின்புறம் வைக்கோல் மேல் அமர்ந்து சென்றார். அட்டபள்ளம் எனுமிடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்தது. இதில், காயமடைந்த பாண்டுரங்கன் மற்றும் பரமசிவம் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கும் பின், மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். அங்கு பரமசிவம் உயிரிழந்தார். பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ