உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரூ.8,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., உட்பட மூவர் கைது

ரூ.8,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., உட்பட மூவர் கைது

அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த எச்.அக்ர ஹாரம் வி.ஏ.ஓ.,வாக குடுமியாம்பட்டியை சேர்ந்த வெங்கடேசன், 49, பணிபுரிகிறார். ஆட்டியானுாரைச் சேர்ந்தவர் சதீஷ், 35. இவர், தனக்கு சொந்தமான நிலம் கூட்டு பட்டாவாக இருப்பதாகவும், அதை தனி பட்டாவாக பெயர் மாற்றம் செய்யக்கோரி விண்ணப்பித்தார். அதற்கு வி.ஏ.ஓ.,விற்கு புரோக்கராக செயல்படும் கீரைப்பட்டியை ச்சேர்ந்த பியாரேஜான், 43, என்பவர், 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத சதீஷ், தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய, 8,000 ரூபாய் நோட்டுகளை நேற்று மதியம், 1:00 மணிக்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த, புரோக்கர் பியாரேஜானிடம் சதீஷ் கொடுத்தார்.அங்கு மறைந்திருந்த சேலம், தர்மபுரி லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர்கள் முருகன், பெருமாள் மற்றும் போலீசார் வி.ஏ.ஓ., வெங்கடேசன், பொன்னேரியைச் சேர்ந்த கிராம உதவியாளர் வாசுதேவன், 41, புரோக்கர் பியாரேஜான் ஆகியோரை கைது செய்து விசாரணைக்கு தர்மபுரிக்கு அழைத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ