உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கருவில் சிசுவின் பாலினம் கண்டறிந்த இருவர் கைது

கருவில் சிசுவின் பாலினம் கண்டறிந்த இருவர் கைது

மகேந்திரமங்கலம்: தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த, சீங்கேரி கூட்-ரோடு அருகே, சட்டவிரோதமாக, கர்ப்பிணிகளுக்கு சிசுவின் பாலினம் கண்டறிந்து, பெண் குழந்தையாக இருந்தால், கருக்க-லைப்பு செய்வதாக, சுகாதாரம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குனர் சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்-படி அவர் மற்றும் மருத்துவர் பாலசுப்ரமணியம், மருந்தாளுனர் முத்துசாமி உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் சீங்கேரி கூட்ரோடு பகுதியில் நேற்று கண்காணித்தனர்.அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டிற்கு கர்ப்பிணிகள் செல்வதை கண்டு பின் தொடர்ந்து சென்று பார்த்தபோது, 4 பேர் கொண்ட குழுவினர், கர்ப்பிணியின் கருவிலுள்ள சிசுவின் பாலினம் கண்ட-றிந்தது தெரிய வந்தது. மருத்துவ குழுவினரை கண்டதும் இருவர் தப்பியோடினர், மற்ற இருவரை பிடித்தனர். விசாரணையில் அவர்கள், தர்மபுரி அடுத்த இலக்கியம்பட்டியை சேர்ந்த கற்பகம், 39, வெண்ணாம்பட்டியை சேர்ந்த வடிவேல், 40 என்பதும், தப்பி-யோடியவர்கள் திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்த திருமலை, 40, ஜோதி, 37, ஆகியோர் என்பதும் தெரியவந்தது. இந்த கருக்க-லைப்பு கும்பலிடம் இருந்த ஸ்கேன் செய்யும் கருவி, மருந்து மற்றும் 18,000 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்து, இருவ-ரையும் மகேந்திரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். அவர்-களை போலீசார் கைது செய்து, தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ