| ADDED : ஏப் 28, 2024 04:04 AM
ஊத்தங்கரை: ஊத்தங்கரையில், மகா முனியப்பன் கொங்கு இளைஞர் அணி சார்பில், வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது.கொங்குநாடு கலைக்குழு நிறுவனர் கே.கே.சி.பாலு மற்றும் முனைவர் சம்பத் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில், கலைக்குழுவின் மகளிர் அணியினர் வள்ளி கும்மி ஆடினர். கடந்த ஒரு மாதமாக முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை திருமணம் குறித்து, பயிற்சி மேற்கொண்ட மகளிர் அணியினர், 150க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து நடனம் ஆடினர். இதைக்காண ஏராளமானோர் திரண்டிருந்தனர். வள்ளி, கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி, ஊத்தங்கரை பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றது. கலைஞர்களின் அழகிய நடனம் மற்றும் கலைநிகழ்ச்சி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்ச்சி மூலம், தமிழ் பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்கவும், இளைய தலைமுறையினரிடையே கலாசார விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மகா முனியப்பன் கொங்கு இளைஞர் அணியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.