| ADDED : ஜூன் 06, 2024 04:26 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மாரியம்பட்டியை சேர்ந்தவர் இளவரசன், 39; ராணுவ வீரர். இவரது மனைவி நந்தினி; கருத்து வேறுபாடால் கடந்த, 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். நந்தினி பட்டுகோணாம்பட்டியிலுள்ள தாய் வீட்டில் வசிக்கிறார்.இந்நிலையில் இளவரசன் தன் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கேட்டு, நந்தினியின் தம்பி ராபீன் மனைவி ரம்யாவிடம் மொபைல்போனில் பேசியுள்ளார். தொடர்ந்து அவருக்கு கடந்த, 6 மாதங்களாக மொபைல்போனில் மெசேஜ் அனுப்பி, உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என, டார்ச்சர் செய்து வந்துள்ளார். இதையறிந்த ராபீன் அரளி விதை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் ரம்யா புகார் படி, ராணுவ வீரர் இளவரசன் மீது, போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.