உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / உலக சுற்றுச்சூழல் தினம்: 500 மரக்கன்றுகள் நடல்

உலக சுற்றுச்சூழல் தினம்: 500 மரக்கன்றுகள் நடல்

நல்லம்பள்ளி, நாகர்கூடல் பகுதியில், ராமகிருஷ்ணா கோவில் வளாகத்தில், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடப்பட்டன.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த நாகர்கூடல் பகுதி யில் ராமகிருஷ்ணா கோவில் உள்ளது. இதில், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கோவில் வளாகத்தில், தனியார் கல்லுாரி மாணவியர், 500 மரக்கன்றுகளை ஒரே நேரத்தில் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கல்லுாரி நிர்வாக அறங்காவலர் அம்மா வசந்தராணி தலைமை வகித்தார். கல்லுாரி அறங்காவலர் சபாநாயகம் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். விழாவில், டி.என்.சி., சிட்ஸ் நிர்வாக அலுவலர் விவேகானந்தன், மருத்துவர்கள் மனோஜ், சிந்துஜாசுதா, ரங்கநாயகி, ஸ்வர்ணலதா ஆகியோர், ஒரே நேரத்தில், 500 மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தனர். இதில், தேக்கு, மகாகனி, நாவல், ஆலமரம், சொர்க்கம், அரசமரம், வேம்பு, கொய்யா, மா உள்ளிட்ட, 20 வகையான மரக்கன்றுகள் நட்டு வைத்தனர். இதில், கல்லுாரி மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ