உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சூறாவளி காற்றில் சாய்ந்த 1,000 வாழை மரங்கள்

சூறாவளி காற்றில் சாய்ந்த 1,000 வாழை மரங்கள்

தர்மபுரி : தர்மபுரி அருகே, ஒரு ஏக்கரில் சாகுபடி செய்திருந்த வாழை மரங்கள் நேற்று முன்தினம் பெய்த கன மழை மற்றும் சூறாவளி காற்றால் சாய்ந்து நாசமானது.தர்மபுரி அருகே, மொன்னையன்கொட்டாயை சேர்ந்த விவசாயி கணேசன், 55; இவர் தன் விவசாய நிலத்தில் ஒரு ஏக்கரில், 1,000 நேந்திரன் வாழை நடவு செய்திருந்தார். தோட்ட பராமரிப்பிற்கு, 2.60 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருந்தார். இன்னும், 15 நாட்களில் அறுவடை செய்யவிருந்த நிலையில், நேற்று முன்தினம் தர்மபுரி பகுதியில் பெய்த கனமழை மற்றும் சூறாவளி காற்றுக்கு, அந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால், 5 லட்சம் ரூபாய் வரை கிடைக்க வேண்டிய வருவாய் முற்றிலும் பறிபோனதாக, கணேசன் வேதனையுடன் தெரிவித்தார். இந்த பாதிப்புக்கு, அரசு இழப்பீடு வழங்க, கோரிக்கை விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை