உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரூ.23 லட்சத்தில் மரகத பூஞ்சோலை பொம்மிடி ஊராட்சியில் திறப்பு

ரூ.23 லட்சத்தில் மரகத பூஞ்சோலை பொம்மிடி ஊராட்சியில் திறப்பு

பாப்பிரெட்டிப்பட்டி: --பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், பொம்மிடி ஊராட்சியில், 23 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு ஹெக்டேர் நிலத்தில், 'மரகத பூஞ்சோலை' அமைக்கப்பட்டது.அதில், வனத்துறை சார்பில், பழம், நிழல், மலர் தரும், 600 செடிகள் நட்டு வளர்த்து வந்தனர். அங்கு நடைபயிற்சி மேற்கொள்ள பிரத்யேக தளம், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதை நேற்று சென்னையிலிருந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.இதை உள்ளாட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் விழா, தர்மபுரி மண்டல வன பாதுகாவலர் பத்மா தலைமையில், தர்மபுரி சமூக காடுகள் மற்றும் விரிவாக்க கோட்ட வன அலுவலர் சக்திவேல் முன்னிலையில், ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் முருகனிடம் ஒப்படைக்கப்பட்டது.விழாவில், பி.டி.ஓ., கிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் தாரணி, துணை தலைவர் ஜாகிதா, தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாபு மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டனர். இதேபோன்று, மஞ்சவாடி ஊராட்சி கோம்பூர் கிராமத்தில், மரகத பூஞ்சோலை திறப்பும், ஊராட்சிக்கு ஒப்படைப்பு நிகழ்வும், அரூர் உதவி வனப்பாதுகாவலர் சரவணன் தலைமையில், வனச்சரக அலுவலர் நீலகண்டன் முன்னிலையில் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், துணைத்தலைவர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை