உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வெவ்வேறு இடங்களில் 3 பெண்கள் மாயம்

வெவ்வேறு இடங்களில் 3 பெண்கள் மாயம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த தும்பலஹள்ளி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகமை சேர்ந்தவர் ஹரிதா, 23. டிப்ளமோ நர்சிங் படித்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமண-மாகி விவாகரத்து ஆன நிலையில், மேச்சேரியில் ஹோம் நர்சாக பணியாற்றி வந்தார். கடந்த, 16 அன்று மாயமானார். * தர்மபுரி அடுத்த, நீலாபுரத்தை சேர்ந்த லட்சுமி, 28. இவருக்கு நாகராஜ் என்பவருடன் திருமணமாகி ஒரு மகன், 3 மகள்கள் உள்-ளனர். கடந்த, 15 அன்று கணவருடன் தகராறால், வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மாயமானார். புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.* தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, எலுமல் மந்தை கிராமத்தை சேர்ந்தவர் கீதா, 30. இவர் பெரிய தடங்கம் பகு-தியை சேர்ந்த சக்திவேல் என்பருடன் திருமணமான நிலையில், தமிழரசு, 7 சஜித்குமார், 5, என்ற இரு மகன்கள் உள்ளனர். கடந்த, 16 அன்று கீதா மாயமானார். புகார் படி, பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை