உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கோவிலில் நகை, பணம் திருடிய 4 பேர் கைது

கோவிலில் நகை, பணம் திருடிய 4 பேர் கைது

தர்மபுரி: நல்லம்பள்ளி அடுத்த சாமிசெட்டிபட்டி மேல்தெருவில் உள்ள முருகர் கோவிலில் கடந்த, 14 இரவு கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு, சுவாமி கழுத்தில் இருந்த ஒரு பவுன் செயின் மற்றும் பீரோவில் இருந்த பணம், 1.90 லட்சம் ரூபாய் திருடு போனது. புகார் படி, தொப்பூர் போலீசார், நேற்று முன்தினம் இரவு திருட்டில் ஈடுபட்ட, நல்லம்பள்ளி ஆதிதிராவிடர் புதிய காலனியை சேர்ந்த உதயகுமார், 21, மாஸ்கோ, 20, சதீஷ்குமார், 29, அபிஷேக், 20, ஆகிய, 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து, ஒரு லட்சம் ரூபாய் மற்றும் ஒரு பவுன் செயின், 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை