தர்மபுரி: அண்ணா நினைவு நாளையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள, 9 கோவில்களில் சமபந்தி நடந்தது.தர்மபுரி மாவட்டத்தில், ஹிந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டிலுள்ள, 9 கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி நடந்தது. இதில், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில், அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவில், சென்றாயசுவாமி, சோமேஸ்வரர் கோவில்களில், அண்ணாதுரை நினைவு நாளையொட்டி, சிறப்பு வழிபாட்டை தொடர்ந்து, சமுதாய கூடத்தில் சமபந்தி நடந்தது. இதில், டி.ஆர்.ஓ., பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், ஹிந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் உதயகுமார் ஆகியோர், பொதுமக்களுடன் உணவு சாப்பிட்டனர். இந்நிகழ்ச்சியில், கோவில் ஆய்வாளர் சங்கர், செயல் அலுவலர் ஜீவானந்தம், தாசில்தார் பார்வதி ஆறுமுகம் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.அதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூன சுவாமி கோவில், குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசுவாமி கோவில், தர்மபுரி சாலை விநாயகர் கோவில், தொப்பூர் பாலத்து முனியப்பன் கோவில், பி.அக்ரஹாரம் முனியப்பன் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், பாலக்கோடு புதுார் மாரியம்மன் கோவில், மொரப்பூர் சிங்காரத்தோப்பு முனியப்பன் கோவில் ஆகிய கோவில்களில் சமபந்தி நடந்தது.