உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தெரு நாயிடம் கடி வாங்கிய பள்ளி மாணவன் பரிதாப பலி

தெரு நாயிடம் கடி வாங்கிய பள்ளி மாணவன் பரிதாப பலி

ஓசூர்; தெருநாய் கடித்ததில், பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த சிக்கேகவுண்டனுாரை சேர்ந்த மாதேஷ் மகன் நந்தீஷ், 9; நீலகிரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்தார். பெற்றோர் கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்வதால், பாட்டி அரவணைப்பில் வளர்ந்தார். கடந்த 3ம் தேதி தெருவில் விளையாடிய போது, அவரை தெருநாய் காலில் கடித்துள்ளது. பாட்டியிடம் நந்தீஷ் கூறவில்லை. நேற்று முன்தினம் உடல்நிலை மோசமானதால், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தான், தன்னை நாய் கடித்ததாக டாக்டரிடம் கூறியுள்ளார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, தர்மபுரி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் நந்தீஷ் இறந்தார். உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி