உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / இருவேறு இடத்தில் விபத்து:பெண் உட்பட 2 பேர் பலி

இருவேறு இடத்தில் விபத்து:பெண் உட்பட 2 பேர் பலி

இண்டூர்;தர்மபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த, நத்தஹள்ளி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி முனியம்மாள், 52. இவர் கடந்த, 30 அன்று அதிகாலை, 5:20 மணிக்கு பி.எஸ்.அக்ரஹாரத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு தர்மபுரி -- பென்னாகரம் சாலையில் சாலையில், இடதுபுறம் நடந்து சென்றார். அப்போது, தர்மபுரியில் இருந்து பென்னாகரம் நோக்கி சென்ற அசோக் லைலண்ட் தோஸ்த் சரக்கு வாகனம் முனியம்மாள் மீது மோதியதில் படுகாயமடைந்து பலியானார். இண்டூர் போலீசார் விசாரிக்கின்றனர். * மகேந்திரமங்கலம் அடுத்த கோவிலுார், கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சத்யராஜ், 36. இவரது மனைவி ஸ்ரீதேவி, 24. இவர்களுக்கு, தீபக், 5, கார்த்திகா, 9 என, 2 குழந்தைகள். நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு மோரணஹள்ளியிலிருந்து வீட்டிற்கு செல்ல தன் அப்பாச்சி பைக்கில் சென்றார். குண்டாங்காடு அருகே வளைவு சாலையில் சென்றபோது எதிரே வந்த, பிக்கப் வேன் மோதியதில் சத்தியராஜ் துாக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து பலியானார். மகேந்திரமங்கலம் போலீசார் சத்யராஜின், உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை