| ADDED : ஜூலை 31, 2024 07:24 AM
தர்மபுரி: தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை, ஓய்வூதியர் சங்க நல்லம்பள்ளி வட்ட, 5வது பேரவை கூட்டம் நல்லம்பள்ளி, சி.ஐ.டி.யு., அலுவலகத்தில் நேற்று நடந்தது. வட்ட தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். ஜாக்டோ ஜியோ மாவட்ட நிதி காப்பாளர் புகழேந்தி, அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாவட்ட செயலாளர் முனுசாமி ஆகியோர் பேசினர்.இதில், தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றும் வகையில், 70 வயதான ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியத்தை, 10 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசை போல், 20 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊர்புற நுாலகர் உள்ளிட்ட தொகுப்பூதிய ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம், 7,850 வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும். ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களவை போல், மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். நல்லம்பள்ளி வட்டத்தில் கருவூல அலுவலகம் அமைத்து தர வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு இலவச காப்பீட்டு திட்டம் வழங்க வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.