உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கிராமங்களில் மாற்றுப்பயிர் சாகுபடியால் யானை - மனித மோதலை தடுக்கலாம்

கிராமங்களில் மாற்றுப்பயிர் சாகுபடியால் யானை - மனித மோதலை தடுக்கலாம்

தளி: தமிழக எல்லையான, ஜவளகிரி வனச்சரகத்தில், 40க்கும் மேற்-பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இவை, இரவில் வனத்தை விட்டு வெளியேறி, விவசாய நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்துகின்றன. சில நேரங்களில் யானை - மனித மோதல்கள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதை தடுக்கும் வகையில், தளி அருகே, கும்மளாபுரம் கிராமத்தில், வனத்துறை சார்பில் யானை - மனித மோதல் தடுப்பு விழிப்பு-ணர்வு கூட்டம் நேற்று நடந்தது. ஜவளகிரி வனச்சரகர் அறிவ-ழகன் தலைமை வகித்தார். மயிலாடுதுறையில் இருந்து வந்தி-ருந்த, யானைகள் குறித்து நன்கு அறிந்த டாக்டர் சிவகணேஷ், விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். இதில், யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் தடுக்க, ஜவளகிரி, தளி காப்புக்காடுகளில் தலா, 6 கி.மீ., துாரத்திற்கு, இரும்புவட கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. தளி காப்புக்காட்டில் மேலும், 15 கி.மீ., துாரம் வேலி அமைக்க உள்ளோம். யானை - மனித மோதலை தடுக்க, வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களில் விவசாயிகள், யானைகள் விரும்பாத பயிர்களை, சாகுபடி செய்யலாம் என அறிவுறுத்தப்பட்-டது.தொடர்ந்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க, மேற்கு மாவட்ட செயலாளர் கணேஷ்ரெட்டி பேசுகையில், ''அதிகளவு தடுப்பணைகள் கட்ட வேண்டும். யானைகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர், வனப்பகுதிக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். யானைகள் நடமாட்டம் குறித்து, விவசாயிகள் தகவல் தெரிவித்தால், உடனடியாக வனத்துறையினர் வர வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ