மேலும் செய்திகள்
சிமென்ட் சாலை பணிக்கு பூஜை
6 hour(s) ago
கோவில்களில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு
6 hour(s) ago
சிவன் கோவில்களில் பிரதோஷம்
6 hour(s) ago
ரூ.33 கோடிக்கு பட்டுக்கூடு ஏலம்
01-Jan-2026
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, கருவூல காலனியை சேர்ந்த மாதேஷ்வரன், 32; இவர் கருவூலகாலனியில் உள்ள மஹா மாரியம்மன் கோவில் பூசாரி. கடந்த, 13ல் காலை கோவிலை திறக்க அவர் வந்தபோது, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே சுவாமி கழுத்திலிருந்த தங்கக்காசுடன் சேர்த்து, 1 பவுன் தாலி, பூஜை மணி, பித்தளை சொம்பு, விளக்கு, ஆரத்தி தட்டு மற்றும், 2,000 ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார், 'சிசிடிவி' பதிவுகளை கொண்டு விசாரித்து, தர்மபுரி அடுத்த செட்டிகரையை சேர்ந்த வேலு, 47, என்பவரை கைது செய்தனர். தலைமறைவான கொட்டாய் தெருவை சேர்ந்த சரவணனை தேடி வருகின்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago
01-Jan-2026