மேலும் செய்திகள்
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
08-Oct-2025
தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
08-Oct-2025
சுகாதாரமற்று இறைச்சி 7 கடைகளுக்கு அபராதம்
08-Oct-2025
தர்மபுரி வைர விழா பேரணி
08-Oct-2025
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்ட குருமன்ஸ் பழங்குடி இன மக்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம், கடத்துாரில், மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் குப்புசாமி, நாகராஜ் முன்னிலை வகித்தனர். ஆதிவாசி மக்களுக்கான தேசிய மேடையின், மத்திய குழு உறுப்பினர் சண்முகம், ஓய்வு பெற்ற டி.ஆர்.ஓ.,கண்ணன் ஆகியோர் பேசினர்.அப்போது, பழங்குடியினர் சமூகத்திற்கு எஸ்.டி., சான்றிதழ் வழங்க பெற்றோர், நெருங்கிய உறவினர், கொடிவழி உறவுகள், ஆகியோரின் சான்றிதழ் ஆய்வு செய்து ஆர்.டி.ஓ., சான்றிதழ் வழங்கலாம். பழங்குடியினர் அணிந்திருக்கும் உடை, உருவத்தை பார்த்து, பழங்குடியினர் இல்லை என சொல்லக்கூடாது. மெய்த்-தன்மை நிரூபிக்க, 50 வருட ஆவணம் கேட்கக்கூடாது. குருமன்ஸ் மக்களுக்கு எஸ்.டி., சான்றிதழ் கிடைக்க, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் போராடும். தர்மபுரி மாவட்டத்தில், ஒரு பகுதிகளுக்கு குருமன்ஸ் பழங்குடி சான்றிதழ் வழங்கப்பட்-டுள்ளது. ஒரு பகுதியில் சான்றிதழ் கேட்டு ஆர்.டி.ஓ.,விடம் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் விசாரணை இன்றி நிலு-வையில் உள்ளது. ஒரே குடும்பத்தில் எஸ்.டி., சான்றிதழ் பெற்றி-ருந்தும், குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்க அதிகாரிகள் மறுக்-கின்றனர். எஸ்.டி., சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ள குருமன்ஸ் பழங்குடி மக்களுக்கு சான்றிதழ் கிடைக்க, மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்-வாறு பேசினர். கூட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் சரவணன், குருமன்ஸ் பழங்குடி மக்கள் சங்க மாநிலத்தலைவர் சிவலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
08-Oct-2025
08-Oct-2025
08-Oct-2025
08-Oct-2025