உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு உதவி பெறும் 8 பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்கம்

அரசு உதவி பெறும் 8 பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்கம்

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டத்திலுள்ள, 8 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், 901 மாணவ, மாணவியர் பயன் பெரும் வகையில், பாப்-பிரெட்டிப்பட்டி யூனியன், பி.பள்ளிப்பட்டி செயின் மேரீஸ் துவக்-கப்பள்ளி வளாகத்தில், மாவட்ட கலெக்டர் சாந்தி முதலமைச்-சரின் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்து, பள்ளி மாணவ, மாணவியருடன் அமர்ந்து உணவருந்தினார்.தர்மபுரியில் உள்ள அனைத்து வட்டாரங்கள், பேருராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள, 1,124 பள்ளிகளில் பயிலும், 52,462 மாணவ, மாணவியர் மற்றும் அரசு நிதி உதவி பெறும், 8 பள்ளி-களில் பயிலும், 901 மாணவ, மாணவியர் என மொத்தம், 1,132 பள்ளிகளில் பயிலும், 53,363 மாணவ, மாணவியர் இத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர்.நிகழ்ச்சியில், தர்மபுரி, தி.மு.க., எம்.பி., மணி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பத்ஹீ முகம்மது நசீர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி-யாளர் (சத்துணவு) சுமதி, மாவட்ட கல்வி அலுவலர் இஸ்மாயில், பி.டி.ஓ.,க்கள் ரவிச்சந்திரன், கிருஷ்ணன், வட்டார கல்வி அலுவ-லர்கள் பழனி, ஜெயகாந்தன், ஊராட்சி மன்ற தலைவர் திருமலா தினேஷ் தலைமை ஆசிரியர் மோகனதாஸ், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ