உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கோவில் கட்ட அரசு நிலத்தில் மண் எடுத்தோர் மீது வழக்கு

கோவில் கட்ட அரசு நிலத்தில் மண் எடுத்தோர் மீது வழக்கு

பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி அருகே, பிக்கிலி கிராம எல்லையில், அரசு புறம்போக்கு நிலத்திலிருந்து, கல் மற்றும் மண் வெட்டி எடுத்து பனைக்குளம் அடுத்த, வத்திமரதள்ளியிலுள்ள மாதேஸ்வரன் கோவில் கட்டுமான பணிக்கு கொண்டு செல்வதாக, பென்னாகரம் தாசில்தார் அலுவலகத்திற்கு புகார் சென்றது. அதன்படி, வருவாய் துறையினர் ஆக., 2ம் தேதியன்று நடத்திய விசார-ணையில், பட்டா நிலத்திலிருந்து வத்திமரதஹள்ளியை சேர்ந்த கோவில் பூசாரி மற்றும் தர்மகர்த்தா ஆகியோர், 50 எண்ணிக்-கையில் பாறைகளையும், அரசு தரிசு புறம்போக்கில் இருந்து, கிரவல் மண்ணை அனுமதியின்றி எடுத்து சென்றதும் தெரியவந்-தது. கனிம வளங்களை அரசு அனுமதியின்றி வெட்டி எடுத்தது தொடர்பாக, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி, பிக்கிலி வி.ஏ.ஓ., சங்கர் புகார் படி, பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்ப-திவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ