உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / டிராக்டரில் மண் கடத்தல் 2 பேர் மீது ‍வழக்கு பதிவு

டிராக்டரில் மண் கடத்தல் 2 பேர் மீது ‍வழக்கு பதிவு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த அச்சல்வாடி பஞ்.,க்கு உட்பட்ட கதவனேரியில், விவசாய பயன்பாட்டிற்கு மண் எடுக்க, தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு, குடுமியாம்பட்டியை சேர்ந்த மாரியப்பன், 35, புதுார் சம்பத், 32, ஆகியோர் கதவனேரியில் இருந்து டிராக்டர் டிரைலர்களில் செங்கல் சூளைக்கு மண் எடுத்துச் செல்வதாக புகார் வந்துள்ளது. சம்பவ இடம் சென்ற அரூர் தாசில்தார் ராதாகிருஷ்ணன், ஆர்.ஐ., குமார் ஆகியோர், 2 டிராக்டர் மற்றும் டிரைலர்களை பறிமுதல் செய்து, அரூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார், மாரியப்பன், சம்பத் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி