உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மாவட்டத்தில் குழந்தை, 3 பெண்கள் மாயம்

மாவட்டத்தில் குழந்தை, 3 பெண்கள் மாயம்

பாப்பிரெட்டிப்பட்டி, சேலம் முகமதுபுறா பகுதியை சேர்ந்தவர் இம்தியாஸ். இவரது மனைவி நாஜீமா, 30. இவர்களுக்கு 7 வயது மகன், 4 வயது மகள் உள்ளனர். தம்பதிக்குள் கருத்து வேறுபாட்டால், நாஜிமா பொம்மிடியிலுள்ள தன் பெற்றோர் வீட்டில் இருந்தார். கடந்த, 11ல் காலை மகள் மற்றும் உறவினர் பர்ஹீன், 23 ஆகியோருடன் மாயமானார். பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.* பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மஞ்சவாடியை சேர்ந்தவர் செந்தில்குமார், 43. கூலித்தொழிலாளி. இவர் மனைவி தனலட்சுமி, 29. சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனை சமையலர். கடந்த, 14ல் காலை மாயமானார். அப்போது, வீட்டிலிருந்த முக்கால் பவுன் நகை, 10,000 ரூபாயும் காணாமல் போனது. பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.* பாப்பிரெட்டிப்பட்டி மாயா பஜார் தெருவை சேர்ந்தவர் ராமன். இவரது மகள் ராதா, 38. மனநலம் பாதித்த இவர், நேற்று முன்தினம் வீட்டிலிருந்தவர் மாயமானார். பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை