உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நிரம்பிய சின்னார் அணை : 150 கன அடி நீர் திறப்பு

நிரம்பிய சின்னார் அணை : 150 கன அடி நீர் திறப்பு

பாலக்கோடு, டிச. 8-பஞ்சப்பள்ளி சின்னாறு அணை, முழு கொள்ளளவை எட்டியதால் வினாடிக்கு, 150 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க, மாவட்ட கலெக்டர் சாந்தி அறிவுறுத்தி உள்ளார்.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த, பஞ்சப்பள்ளி சின்னாறு அணையின், சுற்றுவட்டார பகுதிகளான தளி, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட காப்புக்காடு பகுதிகளில் தொடர் மழையால், சின்னார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதில், 50 அடி உயரம் கொண்ட அணை தற்போது, 48 அடியை எட்டியுள்ளது. அணை பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும், 150 கன அடி நீர் நேற்று முதல் அப்படியே திறந்து விடப்படுகிறது. மேலும், அணைக்கு வரும் நீரின் அளவை பொறுத்து, உபரிநீர் திறக்கப்படுவதின் அளவு மாறுபடும் என, பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், ஆற்றங்கரையோரம் கால்நடைகளை மேய்ச்சலுக்காக கொண்டு செல்ல வேண்டாம் எனவும், மாவட்ட கலெக்டர் சாந்தி அறிவுறுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை