உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / படைப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம்

படைப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட படைப்பாளர் பதிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று, தர்மபுரி முத்து இல்லத்தில் நடந்தது. சங்க தலைவர் நுாலகர் சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் கூத்-தப்பாடி பழனி அறிக்கை வாசித்தார். பொருளாளர் அறிவுடை-நம்பி வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார். இதில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிப்பது, எதிர்வரும் தர்மபுரி புத்தக திருவிழாவில், மாவட்ட படைப்பாளர்களின் நுால்களை வெளியிடுவது, மாவட்ட படைப்பாளர்களின் நுால்கள் விற்பனை செய்ய அரங்கு ஏற்பாடு செய்வது, சங்கத்திற்கு இணையதளம் தொடங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, பாவலர் மலர்வண்ணன் வரவேற்றார். அப்பாவு நன்றி கூறினார். கூட்டத்தில் படைப்பாளர்கள் திரளான கலந்து கொண்-டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை