உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அடிப்படை வசதி செய்யாததால் தேர்தலை புறக்கணிக்க முடிவு

அடிப்படை வசதி செய்யாததால் தேர்தலை புறக்கணிக்க முடிவு

அரூர் : அடிப்படை வசதிகள் செய்து தராததால் தேர்தலை புறக்கணிக்க போவதாக நரிக்குறவ மக்கள், பேனர் வைத்துள்ளனர்.அரூர் அடுத்த தொட்டம்பட்டி பஞ்., பச்சினாம்பட்டியில், 50க்கும் மேற்பட்ட நரிக்குறவ குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனையை அளவீடு செய்து தரக்கோரி, வருவாய்த்துறையினரிடம் தொடர்ந்து மனு அளித்து வந்தனர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே போல், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராமல், காலம் தாழ்த்தி வருவதாக புகார் தெரிவித்த நரிக்குறவ மக்கள், லோக்சபா தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து, ஊரின் மையப்பகுதியில், தேர்தல் புறக்கணிப்பு குறித்த பேனரை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ