உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அ.தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி: பட்டியலின பணிப்பெண் மீது, கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்காத தி.மு.க., அரசை கண்டித்து, தர்மபுரி டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், மாவட்ட, அ.தி.மு.க. சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். இதில், பல்லாவரம், தி.மு.க., - எம்.எல்.ஏ., மகன் வீட்டில் வேலை செய்த, பட்டியலின பணிப்பெண்ணை துன்புறுத்தி சித்ரவதை செய்துள்ளனர். அவர்கள் மீது, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க, போலீசில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக சீர்கெட்டுள்ளதை தடுக்க வேண்டும். தினமும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகமாக நடப்பதை அரசு தடுக்க வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த, தாலிக்கு தங்கம், விலையில்லா ஆடுகள் வழங்கல் மற்றும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், தி.மு.க., அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இவற்றை மீண்டும் செயல்முறைபடுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில், அமைப்பு செயலாளர் சிங்காரம், அம்மா பேரவை செயலாளர் வெற்றிவேல், எம்.எல்.ஏ.,க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், நகர செயலாளர் ரவி மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ