உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பி. பள்ளிப்பட்டி சமுதாயக்கூடம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் அல்வியா தலைமை வகித்தார். செயலாளர் மீனா முன்னிலை வகித்தார். பொருளாளர் ராணி வரவேற்றார். மாவட்ட செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.இதில், பணி ஓய்வு பெறும்போது, அங்கன்வாடி ஊழியர்களுக்கு தனிக்கொடையாக 10 லட்சம் ரூபாய் உதவியாளர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். பணி ஓய்வுக்குப் பிறகு குடும்ப ஓய்வூதியமாக, 9,000 ரூபாய் அகவிலை படியுடன் வழங்க வேண்டும். மே மாத கோடை விடுமுறையை ஒரு மாத காலமாக வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிபந்தனை இன்றி உடனடியாக நிரப்ப வேண்டும். தேர்தல் நேரத்தில், தி.மு.க., அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷமிட்டனர் * கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டார குழந்தைகள் வளர்ச்சி அலுவலகம் முன்பு, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பாக தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி நேற்று மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சுஜாதா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த, 313 வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, 150க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி