உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வங்கி கடன் உதவி கேட்டு மாற்று திறனாளிகள் மனு

வங்கி கடன் உதவி கேட்டு மாற்று திறனாளிகள் மனு

தர்மபுரி: தர்மபுரி கலெக்டரிடம் மாற்று திறனாளி தனது சகோதரியுடன் வந்து வங்கி கடன் உதவி கேட்டு மனு கொடுத்தார். பென்னாகரம் அடுத்த ஜக்கம்பட்டியை சேர்ந்தவர் தேவராஜன். இவருக்கு இரு மகள் மற்றும் இரு மகன்கள். இதில், மூத்த மகளர் பெருமாக்கா (29), மகன் சரவணன் (27). இருவரும் வளர்ச்சி குறைந்து குள்ளமான மாற்று திறனாளிகளாக உள்ளனர்.சரவணன் மூன்றடி உயரமும், பெருமாக்காக இரண்டரை அடி உயரமும் உள்ளனர். இவர்கள் மாற்று திறனாளிகள் தேசிய அடையாள அட்டைகள் வைத்துள்ளனர். சரவணன் அந்த பகுதியில் உள்ள ஹோட்டலில் பணிபுரிந்து வருகிறார். இருந்த போதும், வீட்டருகில் பெட்டி கடை நடத்த சரவணனும், அவரது அக்கா பெருமாக்காவும் முடிவு செய்துள்ளனர். பெட்டி கடை துவங்க நிதி வசதியில்லாததால், வங்கி கடன் உதவி கேட்டு சரவணனும், பெருமாக்காவும் கலெக்டர் லில்லியிடம் மனு கொடுக்க வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ