உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு

தர்மபுரி: தர்மபுரி நான்கு ரோட்டில் நடந்து வரும் பல்வேறு திட்டப்பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார். தர்மபுரி நான்குரோடு, பென்னாகரம் ரோடு, கிருஷ்ணகிரி ரோடு, சேலம் ரோடு ஆகிய அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டப்பணி, சாலை விரிவாக்கம் என அனைத்து பணிகளிலும் கடந்த பல மாதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் அனைத்து ரோடுகளிலும் பணிகள் நடந்து வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிகுள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக மழைக்காலங்களில் இப்பகுதியில் சேறும் சகதியுமாய் மாறி போக்குவரத்திற்கு லாயகற்ற பொதுமக்கள் பெரும்ப பாதிப்படைகின்றனர். இதுதொடர்பாக பொதுமக்களின் தொடர்ச்சியான புகாரால் கலெக்டர் லில்லி இப்பகுதியை நடந்து வரும் பணிகளை திடீர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது இப்பகுதியில் நடந்து வரும் அனைத்து பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட செயற்பொறியாளர் ராசப்பா, குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ராம்மோகன், நகராட்சி ஆணையாளர் அண்ணாதுரை, இன்ஜினியர் ஜெகதீஸ்வரி, நெடுஞ்சாலை துறை உதவி இயக்குனர் அருள்தாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை